7 மாநகராட்சிகளில் இலவச வைஃபை வசதி; பட்ஜெட்டில் வெளியானது அதிரடி அறிவிப்பு!

சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாநகராட்சிகளில் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.  தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த…

சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாநகராட்சிகளில் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். 

தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.

இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் மேம்பாட்டுதுறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.

வடசென்னை வளர்ச்சி திட்டம்

சென்னை வெள்ளத் தடுப்புத் திட்டம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் 434 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன. அடையாறு, கூவம் சீரமைப்பு அடையாறு, கூவம் பகுதிகளை மறுசீரமைக்க ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வெள்ள மேலாண்மை

வெள்ளம், கனமழையை எதிர்கொள்ளும் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.320 கோடி வெள்ள மேலாண்மைக்கு ஒதுக்கீடு செய்யட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சி திட்டம் எனும் புதிய திட்டத்தை செயல்படுத்த அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 4 வழிச்சாலை மேம்பாலம், ரூ.521 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழிச்சாலை மேம்பாலம் ஆகிவற்றிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இலவச வைஃபை வசதி

சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாநகராட்சிகளில் இலவச வைஃபை வழங்கப்படும். பசுமை மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களில் 46 சதவிகிதம் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என நிதியமைச்சர் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.