சிவகங்கை அருகே பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 4.8 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி வரலெட்சுமி இவர் தொண்டு நிறுவனம் நடத்திவருவதாக கூறப்படுகிறது.இவரிடம் 4 கோடியே 80 லட்சம் மதிப்பிலான பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. இதனை மாற்ற ஆல் தேடிக்கொண்டிருந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலை அடுத்துள்ள வலையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவரான அருள் சின்னப்பன் என்பவர் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக வரலெட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அருள் சின்னப்பனை தொடர்புகொண்டதுடன் பழைய பணக்கட்டுகளை 4 பேக்குகளில் எடுத்துக்கொண்டு தனது உறவினரான அசோக்குமாருடன் அதனை மாற்றச் சென்றுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கவே எஸ்.பியின் தனிப்படை சம்பவ இடத்திற்கு சென்று 4.8 கோடி மதிப்பிலான பணப்பையை கைப்பற்றியதுடன் வரலெட்சுமி, அவரது உறவினர் அசோக்குமார் மற்றும் பிசியோதெரபிஸ்ட் அருள் சிண்ணப்பன் ஆகியோரை அழைத்துவந்து காளையார்கோவில் காவல் நிலையத்தில் வைத்து விசாரனை மேற்கொண்டனர். பின்னர் மூவரும் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.







