நல்ல திட்டங்களை குறைசொல்ல நால்வர் இருக்கத்தான் செய்வார்கள்- சேகர்பாபு

நல்ல திட்டங்களை குறைசொல்ல நால்வர் இருக்கத்தான் செய்வார்கள் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு…

நல்ல திட்டங்களை குறைசொல்ல நால்வர் இருக்கத்தான் செய்வார்கள் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் துறையின் பூக்கடை மாவட்டம் சார்பாக நடைபெறும் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, காவல்துறை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பேசிய இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, “ஒரு மாநிலம் எல்லா துறையிலும் முழுமை பெற வேண்டுமானால் பொருளாதாரம், கல்வியில் உயர்வடைய வேண்டும். நாடு சீர்கெடுவதற்கு முழு முதற்காரணம், குற்றப்பின்னணியை ஆய்வு செய்தால் போதைக்கு அடிமையாக இருக்கிறார்கள். பிறகு, போதைப்பழக்கம் ஆட்கொல்லி நோயாக உள்ளது. இதனால் போதை என்பது நம்மை மட்டுமல்ல நம்மை சார்ந்திருப்பவர்களை அழிக்கும் கொடிய விஷமாக உள்ளதாகவும், மாணவர்கள் முயன்றால் முடித்துக் காட்டுவர் என்ற நிலையை உருவாக்க வேண்டும். துறைமுகம் தொகுதியில் போதை பொருட்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்” கூறினார்.

பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர் பாபு, “நாட்டின் வளர்ச்சி, தனி மனிதனின் வளர்ச்சி ஒழுக்கத்தில் அடங்கியிருக்கின்றது. வயது கடந்தவர்களுக்கும் மாணவர்கள் அறிவுரை வழங்கும் புரட்சிகரமான நிலையை தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர். போதை வஸ்துகளை முழுமையாக துறைமுகம் தொகுதியில் அப்புறப்படுத்தி இருக்கிறோம். சமூக விரோதிகளை கட்டுப்படுத்தும் சிறந்த மாவட்டமாக இந்த காவல் மாவட்டம் உள்ளது. நல்ல திட்டங்களை குறைசொல்ல நால்வர் இருக்கத்தான் செய்வார்கள்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.