#DonaldTrump மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு! அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின்…

Former US President Donald Trump

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் களமிறங்கி உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிருகிறார். இதையடுத்து, அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், புளோரிடா கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

இதையும் படியுங்கள் : உணவு போட்டியில் இட்லி தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு – #Onam கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்!

இதையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும், அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.முன்னதாக, கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தோ்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்தபோது அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.