முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் #VCK தலைவர் திருமாவளவன்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் அவர் பேசிய…

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோவில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று அவர் முழக்கமிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில நிமிடங்களில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது.

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற வீடியோ பதிவு செய்து உடனடியாக நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று திருமாவளவன் சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அதிமுக உள்பட அனைத்து கட்சிகளுக்கும் திருமாவளவன் அழைப்பு கொடுத்திருந்த நிலையில் இன்று திமுகவை அழைக்க முதல்வரை நேரில் சந்திக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.