உணவு போட்டியில் இட்லி தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு – #Onam கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்!

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடந்த உணவு போட்டியில் பங்கேற்றவர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்தார். கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவின் வயநாடு பகுதியில்…

participant , food competition ,Onam festival , Kerala ,died ,

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடந்த உணவு போட்டியில் பங்கேற்றவர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்தார்.

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கு மேற்பட்டோர் உயிரிழந்தது இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் பல இடங்களில் ஓணம் திருவிழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சில இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது.

இதையும் படியுங்கள் : DMK பவள விழா – ஒளி அலங்காரத்தால் ஜொலிக்கும் அறிவாலயம் மற்றும் அன்பகம்!

இந்நிலையில் கேரள மாநிலம் காஞ்சிக்கோடு பகுதியில் ஓணம் பண்டிகையொட்டி இட்லி சாப்பிடும் போட்டியானது நடைபெற்றது. இதில் சுரேஷ் என்ற 50 வயது முதியவர் பங்கேற்றுள்ளார். அப்போது போட்டிக்காக இட்லியை அவசரமாக சாப்பிட்ட போது தொண்டையில் இட்லி சிக்கித் துடித்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுரேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.