ராஜீவ் கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ரவிச்சந்திரன் சிறையில் நன்னடத்தையுடன் இருந்துள்ளார். மேலும், தான் சிறையில் உழைத்து சம்பத்தித்த ஊதியத்தை ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காகவும் வழங்கி உள்ளார். எனவே இவர் சமுதாய அக்கறை கொண்ட மனிதர், இவர் சிறையில் இருந்து வெளியே வந்தாலும் மக்கள் எவருக்கும் தீங்காக இருக்க மாட்டார்.
மேலும், சமுதாயத்தில் எதிர்மறை சக்தியாகவும் இருக்க மாட்டார். ஆகவே இதனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் ரவிச்சந்திரனை விடுதலை செய்ய வேண்டும் எனவும் மனுவில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த
ரவிச்சந்திரன் கடந்த 1992-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.  கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை பொய்யாழி இறந்த நிலையில், தாயார் ராஜேஸ்வரி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் உள்ள சூரப்பன்நாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.