ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையான காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது தீவிரவாதிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது வழக்கம். சட்டவிரோதமாக ஆயுதங்கள் கடத்துவது, போதைபொருள் கடத்துவது போன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே காஷ்மீர் எல்லைப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் வாண்டகபோரா என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லை பாதுகாப்பு படை மற்றும் போலீசார் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி சுட ஆரம்பித்தனர். இதில் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதில் ஒருவர் கெய்சர் கோகா என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றொரு தீவிரவாதியை அடையாளம் காணப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி 1 (எம்-4 கார்பைன்), 1 பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.