அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 25ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் “ தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அதிமுக மீதும், எங்களுடைய முன்னாள் தலைவர்கள் பேரறிஞர் அண்ணா . ஜெயலலிதாவை ஆகியோரை அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனவே 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா மற்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்வதாக ” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை த் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணியை பாஜக பயன்படுத்தக் கூடும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதன் மூலம் முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டார்.
#என்றென்றும்_அதிமுககாரன் pic.twitter.com/CiJDEl9kpy
— SP Velumani (@SPVelumanicbe) September 30, 2023
இந்த நிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், அதிமுக கொடியுடன் சைக்கிள் பேரணி நடத்திய புகைப்படத்தை வெளியிட்டு நான் என்றென்றும் அதிமுககாரன் என்று பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அவர் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு அவர் பதிலளித்துள்ளதாக சமூக வலைதளத்தில் அவரது பதிவை பலர் பதிவிட்டு வருகின்றனர்.