இணையம் மூலம் ரூ.854 கோடி மோசடி : 6 பேர் கும்பல் கைது!

ரூ.854 கோடி இணைய மோசடியில் ஈடுபட்ட 6 பேரை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்தததை தொடர்ந்து அதில்…

ரூ.854 கோடி இணைய மோசடியில் ஈடுபட்ட 6 பேரை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்தததை தொடர்ந்து அதில் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் கும்பல் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் ரூ. ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். முதிர்வு காலம் முடிந்த போதும் பணத்தை திருப்பி தராமல் மோசடி கும்பல் இழுத்தடித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பெங்களூரூ காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் 6 பேர் கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கிரிப்டோ (பைனான்ஸ்), பேமென்ட் கேட்வே, கேமிங் ஆப்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் பேமெண்ட் முறைகளில் மொத்தம் ரூ.854 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடி செய்யப்பட்ட மொத்த தொகையில், ஐந்து கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.