மணிகண்டன் கைது அரசியல் உள்நோக்கம் இல்லை: அமைச்சர் விளக்கம்!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் இல்லை என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நடிகை சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருத்தார். புகாரை…

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் இல்லை என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகை சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருத்தார். புகாரை அடுத்து தலைமறைவாகிய மணிகண்டனை கைது செய்ய இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வரப்பட்டது.

இதற்கிடையே, இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யதது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இன்று பெங்களூருவில் உள்ள பனஹனஹள்ளியில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மணிகண்டன் கைது குறித்து பேசியவர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.