முக்கியச் செய்திகள் இந்தியா

இந்திய அளவில் குறைந்துவரும் கொரோனா எண்ணிக்கை!

இந்தியாவில் புதிதாக 58,419 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 58,419 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாராத்துறை தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,98,81,965 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் நோய்த்தொற்றால் 1,576 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிகை 3,86,713 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 87,619 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,87,66,009 ஆக அதிகரித்துள்ளது. தற்போதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,29,243 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை 27,66,93,572 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரியானாவில் சிக்கிய ஏடிஎம் கொள்ளையன்!

Gayathri Venkatesan

விழுப்புரம் ஆசிரியை மற்றும் கோவை சிறுமியை பாராட்டிய பிரதமர் மோடி!

Jayapriya

397 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருகில் சந்திக்கும் இரண்டு கோள்கள்; டிச.21ல் நிகழுவிருக்கும் அதிசயம்!

Dhamotharan