‘ஆசியாவின் நோபல் விருது’ என்று அழைக்கப்படும் உயரிய விருதான ரமோன் மகசேசே விருதை கேரள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா நிராகரித்து விட்டார்.
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே பெயரில் வழங்கப்பட்டுவரும் இந்த விருதுக்கு கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சைலஜா தேர்வு செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை காரணமாக அந்த விருதை ஷைலஜா புறக்கணித்தார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “பிலிப்பைன்ஸில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக பல கொடுமைகளை நிகழ்த்தியவர் ரமோன் மகசேசே. எனவே அவரது பெயரில் வழங்கப்படும் விருதை கட்சித் தலைமை நிராகரிக்க முடிவு செய்தது.
ஷைலஜா தனிநபராகதான் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், கொரானாவுக்கு எதிரான போரில் வென்றது தனிநபர் சாதனை கிடையாது. பொதுவாக அரசியல் தலைவர்கள் மகசேசே விருதுக்குத் தேர்வு செய்யப்படமாட்டார்கள்” என்றார்.
ஷைலஜா கூறுகையில், “நான் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படமாட்டார்கள். நான் இந்த விருதை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை” என்றார்.