தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டி.ஜி.பி பிரஜ் கிஷோர் ரவி பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார்.
பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் நசீர் ஹுசைன் ஆகியோர் முன்னிலையில் டெல்லியில் வைத்து தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.
டி.ஜி.பி.யாக பணியாற்றிய பிரிஜ் கிஷோர் ரவி, ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னரே விருப்ப ஓய்வு பெற்றார். பீகாரை பூர்வீகமாகக் கொண்ட ரவி, 1989 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தமிழ்நாடு கேடரில் தேர்வாகி 34 ஆண்டுகளாக காவல்துறையில் பணியில் இருந்தார். மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் பீகாரில் இருந்து போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்ட ஒழுங்கு டிஜிபியாக பரிந்துரைக்கப்பட்ட, மூவருள் இவரும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.







