தொடங்கியது ஆபரேஷன் பாகுபலி: அதிரடி தேடுதலில் 6 குழுக்கள்

காட்டுயானை பாகுபலியை பிடிக்க ஆறு குழுக்களாக பிரிந்து, வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பாகுபலி என்ற ஒற்றை யானை புகுந்து பயிர்களை நாசம்…

காட்டுயானை பாகுபலியை பிடிக்க ஆறு குழுக்களாக பிரிந்து, வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பாகுபலி என்ற ஒற்றை யானை புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதைக் கும்கி யானைகள் உதவியுடன் பிடித்து ரேடியோ காலர் பொருத்த, வனத்துறை முடிவு செய்துள்ளது.

‘பாகுபலி’யை பிடிக்கும் பணியில் பொள்ளாச்சி டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் இருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஸ்வரா என்ற 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாகுபலி காட்டுயானையை பிடிக்க வனத்துறை வியூகம் அமைக்க முதல்கட்ட ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் பழனிராஜா தலைமையில் சிறுமுகை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் போன்ற வனச்சரக பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். பின்னர் ஆறுபேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டது

அக்குழு தற்போது மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரபகுதிகளில் பாகுபலி யானையை கண்காணித்து தகவல் அளிக்க களத்தில் இறங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.