கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ: அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கவன ஈர்ப்பு தீர்மானம்

கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் , கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டூத் தீ குறித்து அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். தமிழ்நாடு…

கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் , கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டூத் தீ குறித்து அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்து, தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கேள்வி நேரத்தின் போது கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் , கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டூத் தீ குறித்து அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய அவர், கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காட்டுத்தீ காரணமாக மழைவாழ் மக்கள், வனவிலங்குகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கோடை காலம் என்பதால் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, காட்டுத்தீயை அணைக்க நிரந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதே தீர்மானத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளும் கூறினார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், “தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீ, விரைவில் அணைக்க முடியாத அளவில் பரவி வருகிறது. இருந்தும் காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு பெரும்பாலான பகுதிகளில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன், பம்பிங் பக்கெட் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. 210 பேர் தொடந்து 5 நாட்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். இதுவரை 200 ஹெக்டர் பாதிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.