முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்னா யானையை பிடிக்கும் பணியில் வனத்துறை; 2 கும்கி யானைகள் உதவியுடன் தேடுதல் பணி

கூடலூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 மக்னா காட்டு யானையை பிடிக்கும் பணியில் கடந்த 15 நாட்களாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவாலா, பாடந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை PM 2 தந்தம் இல்லாத மக்னா ஆண் காட்டு யானை உடைத்தது. ,அத்துடன் நவம்பர் 19ஆம் தேதி இரவு வாழவையல் கிராமப் பகுதியில் நுழைந்து மூதாட்டி ஒரு முறை தாக்கிக் கொன்ற யானையை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டு கடந்த 15 நாட்களாக 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், 3 கால்நடை மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இரண்டு கும்கி யானைகள் உதவியுடனும், ட்ரோன் கேமராக்களை கொண்டும் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வாச்சிக்கொல்லி, தேவர்சோலை வுட்பிரியர் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் PM 2 யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

கடந்த இரு தினங்களாக புளியம்பாறை, முண்டக்கள்ளி அடர்ந்த வனப்பகுதியில் யானை நடமாட்டம் ட்ரோன் கேமராக்களில் தென்பட்ட நிலையில், நேற்று காலை வழக்கம் போல் வனத்துறையினர் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை யானை நடமாட்டம் தென்படாத நிலையில், நள்ளிரவு பாடந்துறை பகுதியில் அமைந்துள்ள சுண்டவயல் கிராமப் பகுதிக்குள் நுழைந்து சுப்பிரமணியன் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரின் குடியிருப்புகளின் கதவு, ஜன்னல் மற்றும் வீட்டின் முன்பக்க சுவர்களை இடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து குடியிருப்பு வாசிகள் சத்தமிட்டதை அடுத்து யானை மீண்டும் குடியிருப்பின் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 மக்னா காட்டு யானையை விரைந்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

11 நாட்களில் ரூ.250 கோடி வசூலை குவித்த வாரிசு!

Jayasheeba

சென்னை திரும்பிய மக்களால் போக்குவரத்து நெரிசல்

G SaravanaKumar

திருப்பதி கோயில் அன்னதானத்திற்கு 25 டன் காய்கறிகளை அனுப்பி வைத்த ஓசூர் விவசாயிகள்..!

Web Editor