அந்நிய செலவாணி விதிமீறல்கள்; பிபிசி நிறுவனத்தில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை

பிபிசி நிறுவனத்தில் அந்நிய செலவாணி விதிமீறல்கள் தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தினர். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக…

பிபிசி நிறுவனத்தில் அந்நிய செலவாணி விதிமீறல்கள் தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தினர்.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அப்போது முஸ்லிம்களின் நிலை குறித்து ”இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற ஆவணப்படத்தை கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதியும் பிபிசி நிறுவனம் லண்டனில் ஒளிபரப்பியது. இதன் இரண்டாம் பாகம் கடந்த 24ம் தேதி வெளியானது.

பிபிசி சம்பந்தப்பட்ட சர்வதேச வரிஏய்ப்பு மற்றும் பண பரிமாற்ற முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வருமான வரித்துறையினர் கடந்த பிப்ரவரி 14ம் தேதி அன்று டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அதில் முறைகேடுகளை கண்டறிந்து உள்ளதாக வருமான வரி துறை கூறியது. அதன்படி பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது என்றும், பிபிசி வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளில் லாப விவரத்துடன் ஒத்து போகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் இன்று பிபிசி அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். அந்நிறுவனத்திடம், அந்நிய செலாவணி விதிமீறல்கள் தொடர்புடைய புதிய விசாரணைக்கு வேண்டிய, நிதி சார்ந்த விவரங்களை அளிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பிபிசி இந்தியா நிறுவனம் மீது அந்நிய செலாவணி நிர்வாக சட்டத்தின் கீழ் அமலாக்க துறை வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளது. தொடர்ந்து, பணபரிமாற்றங்கள் மற்றும் நிறுவனத்தின் நிதி விவரங்கள் அடங்கிய அறிக்கைகள் உள்ளிட்டவற்றை அமலாக்க துறையினரிடம் சமர்ப்பிக்கும் படியும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து பிபிசி இந்தியாவுக்கு வர கூடிய பணபரிமாற்ற விவரங்கள் உள்ளிட்ட நிதிநிலை அறிக்கை விவரங்களை சமர்ப்பிக்கும்படி அமலாக்க துறை அந்நிறுவனத்திடம் கேட்டு கொண்டு உள்ளது. அந்நிய செலாவணி விதிமீறல்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, விசாரணை உள்ளிட்டவற்றுக்கு பின்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.