டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி துணை ஆறுகளை மேம்படுத்த 3 ஆயிரத்து 159 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நீர்நிலைகளை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக அரசு 15க்கும் மேற்பட்ட காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்மூலம் பருவமழையின்போது காவிரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இந்த நிதியின் மூலம் காவிரியின் துணை ஆறுகளில் தடுப்பணைகள், மதகுகள், தடுப்புச்சுவர்கள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன.
நபார்டு வங்கியின் கடனுதவியுடன் இந்தப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் பணியினை முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.







