மதுரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.!!

மதுரை மாநகர் தெப்பக்குளம் முனிச்சாலை காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதியில் உள்ள உணவகங்களில் பத்திற்கு மேற்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மதுரையில் சுகாதாரமாற்ற முறையில் உணவு பொருட்கள்…

மதுரை மாநகர் தெப்பக்குளம் முனிச்சாலை காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதியில் உள்ள உணவகங்களில் பத்திற்கு மேற்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

மதுரையில் சுகாதாரமாற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்வதாகவும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மதுரையில் உள்ள உணவகங்களில் சோதனை நடத்தினர்.

மதுரை தெப்பக்குளம் முதல் விளக்குத்துண் வரை இருக்கக்கூடிய சுமார் 25-க்கும் மேற்பட்ட உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட 25 கிலோ சிக்கன், அழுகிய பழங்கள் 5 கிலோ, 23 கிலோ காலாவதியான பரோட்டா, காலாவதியான 9 லிட்டர் குழம்பு, தடை செய்யப்பட்ட 9 கிலோ பிளாஸ்டிக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

25 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, 6 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் இன்று காலை சென்னையில் மேற்கு மாம்பலம் பகுதியில் சுமார் 4 ஆயிரம் லிட்டர் கலப்படமான ஆயிலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.