சங்கரன்கோவிலில் திடீர் என வீசிய சூறைக்காற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழைகள் சாய்ந்து சேதமானதில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேலாக நஷ்டம் எற்பட்டுடிள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகில் உள்ள சின்ன கோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பூசை பாண்டியன். இவர் சுமார் 5 ஏக்கர்க்கும் மேலாக செவ்வாழை சாகுபடி செய்து உள்ளார். குலைதள்ளிய வாழைகள் தற்போது அறுவடை செய்யும் பருவத்தை எட்டி உள்ள நிலையில், திடீரென சூறைக்காற்றுடன் பெய்த மழையால் குலை தள்ளிய 1000 க்கும் மேற்பட்ட செவ்வாழைகள் முற்றிலுமாக சாய்ந்து சேதமானது. மேலும், இதில் ஒரு சில பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த செவ்வாழைகளும் வேரோடு சாய்ந்துள்ளது,
இதனால் சுமார் பத்து லட்சத்திற்கும் மேலாக நஷ்டம் ஏற்ப்பட்டு வாழ்வாதாரம் இழந்து இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இதே பகுதியில் உள்ள வேலுச்சாமி என்பவர் தோட்டத்திலும் வாழைகள் முற்றிலும் சாய்ந்து சேதமாகியுள்ளது.
இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கிட தமிழக அரசுக்கு ஆவணம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
——சௌம்யா.மோ







