இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த பேரிடர்களில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கிழக்கு நேபாளத்தில் அமைந்துள்ள இலாம் மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவால் 37 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்.
இதனிடையே நேபாள ராணுவம், ஆயுதக் காவல் படை மற்றும் நேபாள காவல்துறை ஆகிய மூன்று அடுக்குகளிலிருந்தும் பாதுகாப்புப் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நேபாளத்தில் நாளை வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.







