தேனி அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பெரியகுளத்தில் 58 மில்லிமீட்டரும், மஞ்சளாறு அணைப் பகுதியில் 48 மில்லி மீட்டரும், சோத்துப்பாறையில் 29 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
இதனால், கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனச்சரகர் டேவிட்ராஜன் அறிவித்துள்ளார். மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement: