“செப்.9-ஆம் தேதி தவெக கூட்டணி வடிவம் பெற உள்ளது” – அமைச்சர் வன்னி அரசு

செப்.9-ஆம் தேதி நடைபெறும் த்வெக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் புதிய கூட்டணி வடிவம் பெற உள்ளது என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

“பழங்குடி மக்கள் உற்பத்தி செய்கின்ற பொருள் சந்தைக்கு வருவது குறைவு. அந்தப் பொருளை மார்க்கெட்டிங் செய்து கொண்டு வந்து விற்பனை செய்வது வரவேற்கத்தக்கது.

பிரதமர் வேட்பாளர் விஜய் குறித்த கேள்விக்கு, “அவரவர் தலைவர்களை அவர்களது தொண்டர்கள் கூறுவார்கள். அந்த விருப்பமோ, எண்ணமோ தவறு என்று சொல்ல முடியாது; எங்கள் தலைவர் திருமாவளவன் முதல்வராக வேண்டும் என்றுதான் நாங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தவெக அரசின் மீது அதிர்ச்சி என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர் என கூறிய கேள்விக்கு, “ஆட்சி மீது விமர்சனம் வைக்கவில்லை. அதை அவதூறாகத்தான் பார்க்கிறேன். சில சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். காவல்துறை இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றுதான் பார்க்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்னும் இரண்டு நாட்கள் சட்டப்பேரவை உள்ளது. சட்டப்பேரவையில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் உள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் பதிலளிப்பார். ஆணவப் படுகொலை குறித்து சட்டப்பேரவையில் விரைவில் சட்டம் இயற்றப்படும் என அறிவித்துள்ளேன். இதன் மூலம் சமூகப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

தமிழக வெற்றி கழகம் கட்சியின் கூட்டணித் தலைவர்கள் ஒன்பதாம் தேதி சந்திக்க உள்ளனர். புதிய கூட்டணி வடிவம் பெற உள்ளது. இதனைத் தலைவர்கள் பேசி முடிவெடுத்து பெயர் சூட்டுவார்கள்” என்றார்.

முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை குறித்த கேள்விக்கு, “அவர்தான் சட்டப்பேரவையில் நாங்கள் தவறு செய்தால் நடவடிக்கை எடுங்கள் எனத் தெரிவித்தார். அதன் அடிப்படையில்தான் நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.