ஓமனில் மீன் பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் உயிரிழந்த நிலையில் உரிய நிவாரணம் வழங்கக் கோரி அவர்களின் மனைவிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை பகுதியைச் சேர்ந்த கார்மேகம், காசிலிங்கம், ராமநாதன், மற்றொரு காசிலிங்கம் என 4 மீனவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு ஓமன் நாட்டிற்கு மீன்பிடிக்கச் சென்றனர். நான்கு பேரும் கடலில் மாயமான நிலையில் கார்மேகம், ராமநாதன் ஆகியோரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டன.
மேலும் இருவரது உடல்கள் தற்போது வரை மீட்கப்படாததால் அவர்களது குடும்பத்தினர் மிகவும் வேதனையடைந்துள்ளனர். இந்த நிலையில் நான்கு பேரின் மனைவிகளும் உரிய நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.







