பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜாமீன் மனு மீது பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.







