முக்கியச் செய்திகள் தமிழகம்

கடலில் படகு மூழ்கி தத்தளித்த மீனவர்கள் மீட்பு

கன்னியாகுமரி ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த விசைப்படகு திடீரென மூழ்கிய தால், கடலில் தத்தளித்த மீனவர்களை அருகில் இருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் விசைப்படகில் வழக்கம் போல  ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். துறைமுகத்தில் இருந்து 30 நாட்டிக்கல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, படகு திடீரென மூழ்கியது. படகில் நிரப்பப்பட்ட ஐஸ் கட்டிகள் மற்றும் மீன்கள் ஒரு பக்கமாக சரிந்ததால், படகு கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் கடலில் விழுந்த மீனவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி கூச்சல் போட்டனர்.  அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் இதைக் கண்டனர். அவர்கள் உடனடியாக  தங்கள் விசைப்படகு மூலம் தத்தளித்த மீனவர் களை மீட்டனர். பின்னர் அவர்கள் பத்திரமாக கரை திரும்பினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம்!

Vandhana

“ஜாதி, மதம் ஏதுமில்லை”- மதுரை ஆதீனத்துக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி

G SaravanaKumar

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழ்நாடு அரசு பதில் மனு

G SaravanaKumar