முக்கியச் செய்திகள் இந்தியா

புடவையில் வந்ததால் அனுமதி மறுத்தோமா? டெல்லி ஓட்டல் பரபரப்பு விளக்கம்

புடவை அணிந்து வந்ததால் ஓட்டலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில், அன்சல் பிளாசாவில் அகியூலா (Aquila) என்ற ரெஸ்டாரெண்ட் இருக்கிறது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அனிதா சவுத்ரி என்ற பெண் புடவை அணிந்து சென்றார். அவரை தடுத்த ஊழியர்கள், ‘மேற்கத்திய உடையில் வந்தால் மட்டுமே இங்கு அனுமதிக்கப் படுவார்கள்’ என்று தெரிவித்தாகவும் புடவை கட்டி வந்தால் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்ததாகவும் அனிதா கூறியிருந்தார்.

இதுபோன்ற அவமரியாதையை எங்கும் சந்தித்ததில்லை என்றும் இது மிகுந்த வேதனை யை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து, ஊழியரிடம் அவர் பேசும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் பரபரப்பானது. இதை பார்த்த பலரும், தங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர். நடிகைகள் ரிச்சா சதா, மீரா சோப்ரா உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த ரெஸ்டாரண்ட் நிர்வாகம் விளக்கம் ஒன்றையும் அது தொடர்பான வீடியோவையும் இப்போது வெளியிட்டுள்ளது. அதில், அந்த கெஸ்ட் (அனிதா சவுத்ரி) ரெஸ்டாரெண்டுக்கு வந்தபோது, முன்பே நீங்கள் இருக்கையை பதிவு செய்யவில்லை. கொஞ்சம் காத்திருங்கள் என்று அமைதியாகச் சொன்னோம். பிறகு அவரை எங்கு அமர வைப்பது என்று ஊழியர்கள் ஆலோசித்தார்கள்.

ஆனால் அதற்குள் ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்த அந்த கெஸ்ட், எங்கள் ஊழியர்களுடன் சண்டை போட ஆரம்பித்தார். அதோடு மட்டுமில்லாமல் எங்கள் மானேஜரையும் அவர் அறைந்தார்’ என்று தெரிவித்துள்ளது. அவர் மானேஜரை அறையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளரா, திமுக செயலாளரா?: கரு.நாகராஜன்

Ezhilarasan

இந்தியாவில் 45 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை

Jeba Arul Robinson

கொரோனா தடுப்பு பணிகள்: இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Halley karthi