முக்கியச் செய்திகள் சினிமா

கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது ’மின்னல் முரளி’

டோவினோ தாமஸ் நடித்துள்ள ’மின்னல் முரளி’ படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல மலையாள ஹீரோ, டோவினோ தாமஸ். இவர் தமிழில், தனுஷின் ’மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். பாசில் ஜோசப் இயக்கத்தில் இவர் நடித்துள்ள படம், ’மின்னல் முரளி’. இதில் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன், பைஜூ சந்தோஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சூப்பர் ஹீரோ பாணியில் உருவாகி இருக்கும் மலையாளப் படமான இது, பெரும் பொருட் செலவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி யுள்ளது. 90 களின் பின்னணியில் இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கதைப்படி, மின்னல் தாக்குவதால் ஹீரோவுக்கு சூப்பர் பவர் கிடைக்கிறது. அதைக் கொண்டு அவர் என்ன செய்கிறார் என்பது படத்தின் கதை.

இந்தப் படத்தைத் திரையரங்கில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேரடியாக நெட் பிளிக்சில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் கிறிஸ்துமஸ் அன்று Netflix தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2-வது முறை அமலாக்கத்துறை விசாரணை – பேரணி சென்ற ராகுல்காந்தி கைது

Web Editor

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு இழப்பீட்டை செலுத்த இயலாது: நடிகை ஆம்பர்

Web Editor

வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது -சீமான்

EZHILARASAN D