இலங்கை கடற்படையினர் தாக்குதலில் காணமல் போன மீனவரை கண்டுபிடிக்க வேண்டுமென மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படைனர் துரத்தியபோது மூழ்கியதாகவும், அதிலிருந்து மூன்று மீனவர்களில் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு மீனவரை தேடும் பணி 18.10.2021 முதல் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடவும், காணாமல் போன மீனவரை கண்டுபிடித்திடவும் உரிய உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் தனது கடிதத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நீண்டகாலமாக தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வெளியியுறவுத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.








