முக்கியச் செய்திகள் தமிழகம்

1,352 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: நீர்வளத்துறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள 1352 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதுமுள்ள ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. முன்னதாக தூர்வாரும் பணிகளும் வேகவேகமாக செய்து முடிக்கப்பட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பருவமழை இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏரிகளில் நீர் கொள்ளளவு விவரத்தை இன்று வெளியிட்டுள்ளது நீர்வளத்துறை. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 14,138 ஏரிகளில் 1352 ஏரிகள் 100 என்கிற முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் 423 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

2024 ஏரிகள் 76 முதல் 99% வரை நிரம்பியுள்ளதாகவும், 1610 ஏரிகள் 51 முதல் 75% வரை நிரம்பியுள்ளன என்றும் 2517 ஏரிகள் 26 முதல் 50% வரை நிரம்பியுள்ளதாகவும் நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. மேலும், 1 முதல் 25% வரை 5451 ஏரிகள் நிரம்பியுள்ளது. எனினும், 1184 ஏரிகளில் தண்ணீர் நிரம்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது நீர்வளத்துறை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழில் தலைப்பு வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு: தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

EZHILARASAN D

தமிழ்நாடு: இன்றைய கொரோனா நிலவரம்

Halley Karthik

தமிழ்நாட்டில் 70% பேருக்கு டெல்டா வகை கொரோனா: பொது சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்

Halley Karthik