முக்கியச் செய்திகள் குற்றம்

மீன் வெட்டுவதில் தகராறு: இளைஞர் குத்தி கொலை!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மீன் வெட்டுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் திருசெல்வம் மற்றும், அவரது உறவினர் முத்துமணி. இருவரும் மீன் கடையில் மீன் வெட்டி சுத்தம் செய்து கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளனர். மீன் வெட்டிக் கொடுப்பது தொடர்பாக, இருவருக்கு இடையிலும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை அன்று இரவு 10 மணி அளவில் இருவரும் சந்தை பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, மீன் வெட்டுவது தொடர்பாக, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது, தகராறு முற்றவே மீன் வெட்டும் கத்தியால் இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டுள்ளனர். இதில், மார்பு பகுதியில் கத்திக்குத்து காயம் பட்ட திருச்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வயிற்றில் காயம்பட்ட முத்துமணியை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூய்மை பணியாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இறந்து கிடந்த திருச்செல்வத்தின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும், முத்துமணி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சொந்த ஊர் திரும்பும் மக்கள்; பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!

EZHILARASAN D

இன்று 75வது சுதந்திர தினம்; டெல்லியில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்

G SaravanaKumar

பாஜகவின் எண்ணம் ஈடேறாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D