முக்கியச் செய்திகள் விளையாட்டு

முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வெற்றி: ஜோ ரூட் புதிய சாதனை!

இங்கிலாந்துக்கு நியூஸிலாந்து அணி சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலாவது டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 132 ரன்களை எடுத்தது. அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், மேட்டி பாட்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சில் 141 ரன்கள் எடுத்து இருந்தது இங்கிலாந்து. 9 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து அதிரடியாக விளையாடி 285 ரன்கள் எடுத்தது. 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி இலக்கை அடைந்தது.
தொடக்க வரிசை ஆட்டக்காரர்கள் ஸ்கோர் எடுக்க தடுமாறியபோதிலும், ஜோ ரூட் அதிரடியாக விளையாடி சதம் பதிவு செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமலும் இருந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவருடன் கேப்டன் பென் ஸ்டோக்ஸும் சிறப்பாக விளையாடி அரை சதம் பதிவு செய்தார். இவ்வாறாக 5 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

26வது சதம்

முன்னாள் கேப்டன் ஜோ ரூட்டுக்கு இது 26வது சதம் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இங்கிலாந்து வீரர் அலஸ்டைர் குக்குக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார் ஜோ ரூட். ஆட்டத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜோ ரூட்டுக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் வரும் 10ம் தேதி நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது!

Arivazhagan Chinnasamy

மார்க்சிஸ்ட் பெண் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Halley Karthik

மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து: ரூ. 1 கோடிக்கும் அதிகமான பொருட்கள் சேதம்

Gayathri Venkatesan