முக்கியச் செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக மட்டுமே டெஸ்ட் போட்டிகள் இருக்கும்: ஐசிசி தலைவர் எச்சரிக்கை

வரும் ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்தார்.

இங்கிலாந்தில் அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையே 3 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பிசிசி செய்தி நிறுவனத்தின் டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று கிரெக் பார்க்லே பேசியதாவது:
பல நாட்டு அணிகள் அதிக எண்ணிக்கையிலான  கிரிக்கெட் ஆட்டங்களை விளையாட வேண்டும். ஆனால், அந்த நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான ஆட்டங்கள் இனி வரும் காலங்களில் கிடைப்பது கடினம். ஏனென்றால் குறுகிய வடிவிலான கிரிக்கெட்டுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியாவில் இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) வளர்ச்சி பெற்று வருகிறது.
குறுகிய வடிவிலான கிரிக்கெட் நடத்தப்படுவதால் இருதரப்பு கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நடத்த நாட்களை ஒதுக்க முடிவதில்லை. இதனால், அந்த நாடுகளுடன் பிற நாடுகளின் கிரிக்கெட் அணிகளை மோத வைப்பது சவாலாக இருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்னும் 10-15 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும் என்று கருதுகிறேன். மேலும், குறைந்த எண்ணிக்கையிலேயே டெஸ்ட் கிரிக்கெட் விளையாடப்படக் கூடும்.  மகளிர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் வளர்ந்து வருவதாக நான் கருதவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட, அதற்கான கட்டமைப்புகளை உள்நாட்டில் வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட கட்டமைப்புகள் தற்போது எந்த நாட்டிலும் இல்லை என்று கிரெக் பார்க்லே தெரிவித்தார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கபில் சிபலும் சமாஜ்வாதி கட்சியும்

Mohan Dass

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை வெற்றிபெற மக்கள் இயக்கம்

EZHILARASAN D

‘அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும்’ – சென்னை உயர் நீதிமன்றம்

Arivazhagan Chinnasamy