முதல் டி20 போட்டி : இந்தியா-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது..

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த 3 போட்டிகளும் டெல்லியில் நடக்கின்றன. இந்த நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. 2-வது போட்டி 15-ம் தேதியும், 3-வது போட்டி 17-ம் தேதியும் நடக்கின்றன.

ஸ்ரேயாஸ் அய்யர் 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு இந்திய அணி உள்ளூரில் விளையாடும் முதல் தொடர் இதுவாகும். இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.. ஆப்கானிஸ்தான் அணி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 18 முறை இந்தியாவுடன் மோதி இருக்கிறது. அதில் ஒன்றில் கூட வெற்றி பெற்றது கிடையாது.

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் அல்லது வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), குல்படின் நைப், செடியுல்லா அடல், டார்விஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ரஷித் கான், முஜுப் உர் ரஹ்மான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி அல்லது நவீன் உல்-ஹக்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.