நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ; இரட்டை சதம் அடித்த சுப்மன் கில்

இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து சாதனை படத்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20…

இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து சாதனை படத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள்  கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. ஒரு ஒரு நாள் போட்டி தொடரின் முதல்நாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும்  இணைந்து இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர்.  பவுண்டரியும், சிக்சருமாக அடித்து ஆடியதில்  இந்திய அணியின் ரன் எண்ணிக்கை  மளமளவென உயர்ந்தது.

50 ஓவரின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை  இழந்து 349 ரன் எடுத்துள்ளது. இதன் மூலம் 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூசிலாந்து அணிக்கு இந்திய அணி நிர்ணயித்துள்ளது. அதிக பட்சமாக இந்திய வீரர் சுப்மன் கில் 149 பந்துகளுக்கு 19 பவுண்ட்ரி மற்றும் 9 சிக்சர்கள் அடித்து 208 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

19 இன்னிங்ஸில் 1000 ரன்களை பதிவு செய்ததன் மூலம், இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ஷிகர் தவானின் சாதனையை முறியடித்து  வேகமாக 1000 ரன்களை எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். அதேபோல சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.