9 நாட்களுக்கு பின் பட்டாசு ஆலைகள் திறப்பு!

கடந்த 9 நாட்களாக மூடப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்ய 15 ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த 14ம் தேதி முதல் ஆய்வு துவங்கியது. பாட்டாசு ஆலை ஆய்வு குறித்த அச்சத்தினால் சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 14ம் தேதி முதல் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டது.

இதனிடையே ஆய்வு நடத்த ஆலை நிர்வாகங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என மாவட்ட நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்ததை தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்காத ஆலைகளை மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த 9 நாட்களாக மூடப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு பட்டாசு உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.