டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : குழந்தைகள் உட்பட 9 பேர் பலி…..!

டெல்லியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர்.

டெல்லியின் பாலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று (மார்ச் 18) காலை 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 30 தீயணைப்புப் படைகள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள பதிவில், ”பாலம் (Palam) பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து துரதிர்ஷ்டவசமானது. மாவட்ட நிர்வாகம், டெல்லி தீயணைப்புத் துறை மற்றும் டெல்லி காவல்துறை ஆகியவை மீட்புப் பணிகளை முன்னின்று நடத்தி வருகின்றன. இவ்விபத்து குறித்து விசாரிக்க நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.