கொலம்பியாவில் சுரங்க விபத்து; 9 பேர் பலி…!

கொலம்பியாவில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏராளமான சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சட்டவிரோதமானவையும் அடக்கம். இதனால் அங்கு அடிக்கடி சுரங்க விபத்துகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் நேற்று (மே 4) நாட்டின் முக்கிய பகுதியான சுடடௌசாவில் ஏற்பட்ட ஒரு சுரங்க வெடிவிபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக அம்மாகாண ஆளுநர் வெளியிட்டுள்ள தகவலின்படி, வாயுக்கள் வெளியேறாமல் தேங்கியதே இந்த வெடிவிபத்திற்கு காரணம் என்று  கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது சுரங்கத்தில் 15 பேர் இருந்ததாகவும் அவர்களில் 9 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் மற்ற 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு தேசிய சுரங்க முகமை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.