ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், இம்மலையைச் சுற்றிலும் குடியிருப்புகளில் உள்ள பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மலையில் அமைந்துள்ள கழுதகடவு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, காற்றின் வேகம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு வேகமாக பரவிவருகிறது. மலையின் மேல் பகுதியில் எரியும் நெருப்பு, சில சமயங்களில் குடியிருப்பு பகுதிகளை நோக்கி பரவுவதால், அங்கு வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி பொதுமக்கள் தீயை விரைந்து கட்டுப்படுத்த வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சௌம்யா.மோ







