ஒசூரில் நில எடுப்புக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏற்படுவதாக கூறி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு – கர்நாடகாவை இணைக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் மத்திய அரசால் சாட்டிலை டவுன் ரிங் ரோடு எனும் சாலை விரிவாக்க திட்டத்தை ஒசூரில் கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இது பெங்களுரு தேவனஹள்ளியில் துவங்கி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த சாத்தனுார் கிராமத்தில் இருந்து 25 கிராமங்களை கடந்து மீண்டும் தேவனஹள்ளியில் வட்டசாலையாக முடிகிறது.
இதற்காக 800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தும் பணி பணி நடைபெற்று வந்தது. விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் வழங்காமலும், ஆவணங்களை வழங்காமலும் வருவாய் துறையினர் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
—அனகா காளமேகன்