FIFA2026: பராகுவேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஃப்ரான்ஸ்

ஃபிஃபா உலககோப்பை கால்பந்து போட்டியில் பராகுவேவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஃப்ரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

2026 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்துப் தொடர் அமெரிக்கா, அர்ஜெண்டினா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றுகள் மற்றும் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுகள் முடிந்து தற்போது ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் ஃபரான்ஸ் மற்றும் பராகுவே அணிகள் மோதின.

அமெரிக்காவின் பிலடெல்பியா மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்காததால் 0-0 என சமநிலையில் இருந்தது. இதனையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 70-வது நிமிடத்தில் ஃப்ரான்ஸ் அணியின் கேப்டன் எம்பாப்பே ஒருகோல் அடித்தார். இதனால் ஃப்ரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதனையடுத்து இரு அணிகளும் ஆட்டத்தின் முடிவு வரை கோல் அடிக்காததால் ஃப்ரான்ஸ் அணி வெற்றிபெற்றது. இதன்மூல ஃப்ரான்ஸ் அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

வருகின்ற ஜூலை 9-ஆம் தேதி நடைபெற உள்ள காலிறுதிச் சுற்றில் ஃப்ரான்ஸ் அணி மொராக்கோவை எதிர்கொள்ள உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.