சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மொட்டை மாடியில் ஏ.சி.யின் அவுட்டோர் அருகே தேவையில்லாத தாள்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மதியம் ஏ.சி.அவுடோரில் தீ பற்றி எரிந்து, பின் அருகில் இருந்த தாள்களிலும் பற்றியிருக்கிறது. இதனைக் கண்டத்தும் அங்குள்ள சி.பி.சி.ஐ.டி வளாக காவலர்கள், தீ பரவாமல் இருக்க தீயினைப் போராடி அணைத்தனர்.
சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதகத் தீயணைப்பு துறையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, கீழ்பாக்கத்தில் இருந்து இரு தீயணைப்பு வாகனங்கள் தீ அணைக்க கொண்டுவரப்பட்டது. தீ அணைக்கப்பட்டதை அறிந்த தீ அணைப்பு வீரர்கள், தீ வேறு எங்கும் பரவுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: