பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடி வளாகத்தில் இதுவரை 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறினார். மேலும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பணியிடங்களிலும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்திய ராதாகிருஷ்ணன், முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று எச்சரித்தார்.







