முக்கியச் செய்திகள் இந்தியா

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்குப் பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு நிதியாண்டுக்கான கடைசி பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். வருமான வரி விலக்கு உச்சவரம்பு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாத நிலையில், உச்ச வரம்பு அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

மாத ஊதியதாரர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், பாஜக தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், நடுத்தரப் பிரிவு மக்களை கவர்வதற்கான புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனாவில் இருந்து மீண்ட 105 வயது தம்பதி!

EZHILARASAN D

இபிஎஸ் தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கு

Web Editor

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

G SaravanaKumar