இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் அடுத்த மூன்று போட்டிகளில் இந்திய அணி தோல்வியுற்றது. கடைசியாக நடைபெற்ற 4 ஆவது டி 20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று நடைபெட்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில் 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 257 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு டன் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 201 ரன்களே எடுத் தது. இதனால் இங்கிலாந்து அணி 56 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 56 ரன்னும், திலக் வர்மா 53 ரன்னும், கேப் டன் ஸ்ரேயாஸ் அய்யர் 28 ரன்னும், சஞ்சு சாம்சன் 27 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சாம்கர்ரன் 3 விக்கெட்டும், அடில் ரஷித் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
இதன்மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், இந்தியாவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.




