திரைப்பட இயக்குநர் #MohanG கைது! காரணம் என்ன?

பழனி முருகன் கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கலப்படம் உள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்திருந்த நிலையில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி…

Film director #MohanG arrested! What is the reason?

பழனி முருகன் கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கலப்படம் உள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்திருந்த நிலையில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.

லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை குஜராத்தில் உள்ள ஒரு ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு , பாமாயில் எண்ணெய் உள்ளிட்டவை கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம் உள்ளதாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி தெரிவித்திருந்தார். பழனி முருகன் கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பேசியதாக இயக்குநர் மோகன் ஜியை திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் இன்று சென்னையில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் அவரை திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.