#Chennai-ல் போதை மாத்திரை விற்பனை | திரைப்பட உதவி இயக்குநர் அதிரடி கைது!

சென்னை வடபழனியில் போதை மாத்திரை விற்றதாக திரைப்பட உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டார். சென்னை அசோக்நகர் பகுதியில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்கப்படுவதாக கே.கே.நகர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 13ம் தேதி…

Film assistant director arrested for selling narcotic pills in Vadapalani, Chennai.

சென்னை வடபழனியில் போதை மாத்திரை விற்றதாக திரைப்பட உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டார்.

சென்னை அசோக்நகர் பகுதியில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்கப்படுவதாக கே.கே.நகர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 13ம் தேதி அசோக்நகர் 92-வது தெருவில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : #WeatherUpdate | தமிழ்நாட்டில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை!

இதையடுத்து, அவரிடம் விசாரித்ததில் அவர் மறைத்து வைத்திருந்த 30 போதை மாத்திரை, 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த திரைப்பட உதவி இயக்குநர் ஸ்ரீதா்ஷன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தர்ஷனைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.