கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சினிமா மற்றும் சின்னத்திரை படப்படிப்புகள் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன (ஃபெப்சி) தலைவர், ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
கொரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனிடையே சினிமா, சின்னத்திரை படப்பிடிப் புகளை, நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கொரோனாவின் தீவிரம் காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்படிப்புகள் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஃபெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் கூறும்போது, கொரோனோ நிவாரண உதவியாக திரைப்பட தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.2000 வழங்க வேண்டும், திரைப்பட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தனி முகாம் ஏற்படுத்த வேண்டும் என கடந்த வாரம் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். இந்நிலையில், இந்த மாதம் இறுதி வரை ஷூட்டிங்கில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளோம்’ என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.