கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த மே 10-ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த ஊரடங்கு காலத்தில் நேர கட்டுப்பாட்டை மீறி கடைகள், வணிக நிறுவனங்கள் மீது சென்னை மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. இது குறித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, “சென்னை மாநகராட்சி இந்த ஊரடங்கு காலத்தில் நேரக் கட்டுப்பாட்டை மீறிய 239 கடைகளுக்குச் சீல் வைத்துள்ளோம்.
அதேபோல் பல முறை எச்சரிக்கை செய்தும் கடைகளை நீண்டநேரம் திறந்துவைத்தவர்களிடம் இருந்து 1 கோடியே 44 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுவருகிறார்கள். பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை முழுமையாகக் கடைப்பிடிக்கவேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.







